ஓ,பி,எஸ், ஏற்றிய ஒளி விளக்கு

ஓ,பி,எஸ், ஏற்றிய ஒளி விளக்கு



இந்தியா முழுவதும் கொராேனோ வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக 144 தடை உத்தரவைப் போட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள்  துரித நடவடிக்கை எடுத்து வருகிறது .இந்த கொடிய வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் பெரும் பங்காக மக்களோடு இணைந்து மருத்துவர்கள். காவல்துறையினர் .சுகாதார பணியாளர்கள். மற்றும் பத்திரிக்கையாளர்கள்  மிகப்பெரிய பங்காற்றி வருகின்றனா்,


இவர்கள் இரவு பகல் என்று பாராமல் தங்களுடைய வீட்டை மறந்து மக்களுக்காக பணி செய்வதை பாராட்டும் விதமாகவும் உற்சாகப்படுத்தும் விதமாகவும் கடந்த வாரம் கரகோஷம் எழுப்பி கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள் இன்று மீண்டும் அவர்களுக்கு புத்துணர்ச்சியை உண்டாக்கும் கூடிய வகையிலும் 144 தடை உத்தரவு காலங்களில் வீட்டிற்குள்ளேயே தனிமையில் தங்களைத் தனித்து வைத்திருக்கும் பொதுமக்கள் கவலைகளை மறந்து நல்ல காரியங்கள் நாட்டில் நடைபெற வேண்டும் என்பதற்கு நாடு முழுவதும் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு அவரவர் வீட்டுக்கு முன்பாக பால்கனி மற்றும் தெருக்களில் அகல்விளக்கு ஏற்றி உற்சாகப்படுத்த வேண்டும் என பாரத பிரதமர் கேட்டுக்கொண்டாா்,


இதற்கு இணங்க நேற்று நாடு முழுவதும் பொதுமக்கள் தங்களுடைய இல்லத்திற்கு முன்பாக மின் விளக்குகளை அனைத்து விட்டு அகல் விளக்கை ஏற்றி ஒளி வெள்ளம் பரவச் செய்தனர்


இதனை தொடர்ந்து பெரியகுளத்தில் தங்களுடைய இல்லத்தில் தமிழகத்தினுடைய துணை முதல்வர் மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய வேண்டுகோளை செயல்படுத்தும் விதமாக தங்களுடைய வீட்டின் முன்பாக அகல்விளக்கு ஏற்றி ஒளிரச்செய்தார்



 தேனி மாவட்ட செய்திக்காக 


அ.வெள்ளைச்சாமி  9442890100