தேனி அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஒரு கோடியில் 8 செயற்கை சுவாச கருவிகள் 

தேனி அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஒரு கோடியில் 8 செயற்கை சுவாச கருவிகள் 



 தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரனோ வைரஸ்  சிகிச்சை பிரிவுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்குவதற்கு ரூபாய் ஒரு கோடி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்தார்..


 அதன்படி அந்த நிதியில் எட்டு செயற்கை சுவாச கருவிகள் வழங்கப்பட்டுள்ளதால் இந்த கருவிகளை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  நடந்தது இதில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு செயற்கை சுவாச கருவி களை தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினார்.



 இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜாவி, தேனி  நாடாளுமன்ற உறுப்பினா் ப. ரவீந்திரநாத்குமார் குமார், அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான் மற்றும் பலர் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் சிறப்பித்தனர்.


தேனி மாவட்ட செய்திக்காக  அ வெள்ளைச்சாமி 
9442890100