கொரோனா ஒழிப்பு பணியில் கே,பி,முனுசாமி
காவேரிப்பட்டணத்தில் அதிமுக கழகத் துணை ஒருங்கிணைப்பாளர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கேபி முனுசாமி மக்களுக்கு அடிப்படை தேவைகளான ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருட்களை வழங்கினார்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் அதிமுக கழக துணை ஒருங்கிணைப்பாளரும் , முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உருப்பினருமான அண்ணார் கே.பி.முனுசாமி அவர்கள் தலைமையில் தமிழக முதல்வர்களின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க இந்த சூழ்நிலையில்
உங்களோடு நாங்கள் இணைந்திருப்போம்
என்ற அடிப்படையில் நலிவடைந்த குடும்பங்களுக்கு அரிசி, சமையல் எண்ணெய் ,வெங்காயம் , பருப்பு, உப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பெட்டிகளை மக்களுக்கு வழங்கினார்.
காவேரிபட்டினம் பேருரட்சி உட்பட்ட பகுதிகளில் கொரானா தடுப்பு கிருமிநாசினி தெளிக்கும் பணியை துவக்கி வைத்தார்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் பேருரட்சி உட்பட்ட பகுதிகளில் கொரானா தடுப்பு கிருமிநாசினி தெளிக்கும் பணியை அதிமுக கழக துணை ஒருங்கினைப்பாளரும். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி துவக்கி வைத்தார்.அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி , கிராம நிர்வாக அலுவலர் வரதராஜ் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்